கமல்ஹாசன் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று இரவு 9 மணியளவில் சந்தித்தார். இச் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றேன். எனது அரசியல் பயணம் குறித்து கருணாநிதியிடம் தெரிவித்தேன். கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ், மக்கள்மீது உள்ள அக்கறை மூன்றையும் அவரிடம் கற்றேன். என் கொள்கையில் திராவிடம் இருக்கும். மக்கள் சேவைக்காகத்தான் அரசியலுக்கு வந்து உள்ளேன். என் கொள்கைகள் என்ன என்பது 21-ம் தேதி தெரிந்து கொள்ளலாம் என்றார். திமுகவுடன் கூட்டணி என்ற கேள்வி தொடர்பாக கமல்ஹாசன் பதிலளிக்கையில், கொள்கையை புரிந்த பின்னர் திமுக கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்றார்.