உதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த
பொருட்செலவில் உருவாகி வந்த உத்தரவு மகாராஜா-வின்
இறுதிகட்ட கிராபிக்கிஸ்-க்கான படப்பிடிப்பு ஏராளமான
குதிரைகள், வீர்ர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக
நேற்று நிறைவுற்றது. படத்திற்கு முக்கியமானது இதன்
கிராபிக்கிஸ் என்பதால் சில வெளிநாட்டில் இருந்து தொழில்
நுட்ப வல்லுனர்கள் வரவைக்க பட்டுள்ளனர் மற்றும்
ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக
படம் பிடிக்கப்பட்டது.
படத்தில் முக்கியமாக கிராபிக்கிஸ் மற்றும் சவுண்ட்
எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக
இதன் கதாநாயகன் உதயா மொட்டை அடித்து அந்த
காட்சியில் நடித்தார்.
இத்திரைப்படத்தில் இது உதயாவின் ஐந்தாவது கெட்-அப்
ஆகும். இளைய திலகம் பிரபு மிக முக்கியமான மகாராஜா
கதாபாத்திரத்தில் நடிக்க, நாசர், ஸ்ரீமன், மனோபாலா,
கோவைசரளா, M.S.பாஸ்கர், குட்டிபத்மினி, தனஞ்செயன்
சோனியா போஸ், எடிட்டர் டான் பாஸ்கோஉள்ளிட்ட பல
பிரபலங்கள் நடித்திருக்க மற்றும் புது முக கதாநாயகிகள்
பிரியங்கா, சேரா, மதுமிதா நடிக்க, அறிமுக இயக்குனர்
ஆஸிப் குரைஷி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க,
ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய. நா
முத்துகுமாரின் பாடல் வரிகளுக்கு நரேன் பாலகுமார்
இசையமைக்க, எடிட்டர் ஆண்டனியின் உதவியாளர்
சத்யநாராயணன் எடிட்டிங் செய்ய, திரை துறையினரின்
ஸ்டிரைக் முடிவுற்றவுடன் படம் வெளிவர இருக்கும் தேதி
அறிவித்து வெளிவர இருக்கிறது “உத்தரவு மகாராஜா”