ஏப்ரல் 4-ம்தேதி கோட்டை நோக்கி பேரணி!-விஷால் அறிவிப்பு!!
இக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியது :- பொதுமக்கள் திரைஅரங்கிற்க்கு வந்து படம் பார்க்கும் போது எந்த வித பாரமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும். விவசாயிகளும், தயாரிப்பாளர்களும் ஒன்று என்ற நிலையில் தான் இப்போது இருக்கிறோம் . தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்த வரை புதுபடங்கள் ரீலீஸ் ஆகாது, தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்கிலும் கம்யூட்டர் டிக்கெட் வழங்க வலியுறுத்தி உள்ளோம். எங்களது கோரிக்கையை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் ஒரு மனுவாக கொடுக்க உள்ளோம். தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.முதலமைச்சர், செய்தித்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அடுத்த வாரம் புதன் கிழமை பேரனியாக சென்று மனு கொடுக்க உள்ளோம் .வேலை நிறுத்தம் என்றால் அடிமட்ட ஊழியர்களுக்கு கஷ்டமான ஒன்றாக தான் இருக்கும்,ஆனால் அதற்கான தகுந்து தீர்வு விரைவில் கிடைக்கும்.எங்களது கோரிக்கைகள் இது தான்,1.எங்களுடைய கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாததால் புதிய திரைப்படங்களை வெளியிட போவதில்லை என்ற நிலை தொடரும். 2. தமிழக அரசு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.