Tuesday, May 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

உங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது! ரஜினி மீது பாரதிராஜா கடும் தாக்கு!!

admin by admin
April 16, 2018
in News
426 4
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என கடந்த 10 ஆம் தேதி பல்வேறு அமைப்புகளின் சார்பில் சென்னை, அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்கார்களுக்கும் ,போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ,தடியடியில் முடிந்தது , இதில் இயக்குனர்கள் வெற்றிமாறன்,களஞ்சியம் உள்பட பலதிரையுலக பிரமுகர்களும் தாக்கப்பட்டனர். அப்போராட்டத்தில் ,  சிலர் போலீஸைத் தாக்குவது போன்ற வீடியோ ஒன்றை தனது டுவிட்டர்பக்கத்தில் வெளியிட்ட ரஜினிகாந்த்,“வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் இருக்கும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறைக் கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” எனவும் கருத்து தெரிவித்து இருந்தார்.இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ரஜினியின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.இந்நிலையில் , ரஜினியின் கருத்து வெளியாகி , 6 நாட்கள் ஆன நிலையில், இயக்குநர் பாரதிராஜா ரஜினி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி முழு தமிழகமும் ஒரே குரலில் தங்கள் உணர்வுகளை எதிரொலித்த இந்த நேரத்தில், நம் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையும் அறவழியில் போராடியது. ஆனால், நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம் மீது கத்தி வைத்துப் பதம்பார்க்க நினைக்கிறது ரஜினியின் சமீபத்திய ட்விட்டர் பேச்சு.நான் அவரைக் கேட்கிறேன்… எது வன்முறையில் உச்சகட்டம் ரஜினி அவர்களே? அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது.தங்களுடைய திரைப்படம் வெளியாகும்போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ஒரு நடிகனை, தமிழ்த் திரையுலகம் சந்தித்ததே இல்லை. தமிழ்நாட்டிலும் சரி, உலக அளவிலும் சரி… தமிழன் கொட்டிக் கொடுத்த பணத்தில், சேர்த்துவைத்த செல்வத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடினீர்களா? இல்லை, ஓர் அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?எதற்கும் வாய் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம், இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்கிறீர்களே…ஓ… இப்போதுதான் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது, நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக் காவியின் தூதுவன் என்று! உங்கள் வேஷம் மெல்ல மெல்லக் கலைகிறது. ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள்… காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது வெந்து செத்தது எங்கள் தமிழினம், சேதமடைந்தது எங்கள் தமிழர் சொத்துகள்.அங்குள்ள கலைஞர்கள் எல்லாம் ஒன்றுகூடி எதிர்க்குரல் கொடுத்த போதும், அங்குள்ள காவலர்கள் துரத்தி துரத்தி அடித்தபோதும், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கியபோதும், வாகன ஓட்டிகளை நிர்வாணப்படுத்தி அடித்தபோதும் வாய் திறக்காத நீங்கள், இன்று தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, எங்களையே வன்முறையாளர்கள் என்று பட்டம் சுமத்துகிறீர்கள்.சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன் தான். எங்கோ கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியைக் கறைபடுத்த நினைத்த ஒருவன் செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம். நீங்கள், எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்.நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டுச் சாப்பாட்டிற்கும், உங்கள் வீட்டு குடிதண்ணீருக்கும் சேர்த்துத்தான் எங்கள் வீரத்தமிழ் இளைஞர்கள் பலர், காவல்துறை நடத்திய அடிதடியில் ரத்தம் சிந்தினார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.பேசும்போது, எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லையென்றால், எம் தமிழ் மக்களால் நீங்கள் ஓரம்கட்டப்படுவீர்கள். அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை என்பதையும் நீங்கள் நன்கு உணர்வீர்கள் என்பதையும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் பாரதிராஜா.

 

You might also like

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

admin

admin

Related Posts

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!
News

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

by admin
May 25, 2026
விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!
News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

by admin
May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!
News

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

by admin
May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!
News

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

by admin
May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!
News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 24, 2026

Recent News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

May 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?