‘தனது முதுகில் ஒட்டியிருக்கும் மண்ணை தட்டிவிடாமல் மற்றவர்களின் அழுக்கைப் பற்றிப் பேசுவதற்கு எவர்க்கும் தகுதி இல்லை.!?ஏமாறுவதும் ஏமாற்றமும் மொத்த உலக சினிமாவுக்கும் பொதுவானதுதான் என்கிறார்கள்’ சிலர்.
ஸ்ரீரெட்டியின் வன்புணர்வு குற்றச்சாட்டுப் பற்றி நடிகைகள் என்ன நினைக்கிறார்கள்?
‘என்கிட்ட மோதாதே,”என்னை அறிந்தால்’ ‘நிமிர்’ இன்னும் சில படங்களில் நடித்திருக்கும் பார்வதி நாயரிடம் மனம் விட்டு பேசினேன்.
“ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு.விஷால் சார் எடுத்த முடிவு சூப்பர். இருட்டை கண்டு பயப்படாம விடிஞ்சுதான் ஆகும்னு உறுதியோடு போராடி ஒரு நல்ல முடிவு எடுத்து இருக்காங்க.!”
“இதுவரை நீங்க ‘அறம்’ மாதிரி ஒரு படத்தில் நடிக்கலியே சுனு லட்சுமி செகன்ட் லீட் என்றாலும் பேசும்படி இருந்ததே?”
“நான் ஒன்னும் அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க மாட்டேன்னு சொல்லலியே! வாய்ப்புகள் வந்தால் நானும் திறமையை காட்டலாம்.ஒரு ஹீரோயினாக இருந்தாலும் ,டபிள் ஹீரோயின் சப்ஜெக்ட் படமாக இருந்தாலும் நடிப்பேன்.நடிக்கிறேன்.என்னைப் பொருத்த வரை பேமிலி சப்ஜெக்ட் ,கேரக்டர்சை முன்னிலைப் படுத்துற படமாக இருந்தால் பெட்டர்.”
‘சினிமாவுக்கு வரணும்னு நினைச்சுதான் வந்திங்களா?”
“நோ!எதிர்பாராமல் வந்ததுதான். எனக்கு டிசைனர் ஆகணும்னுதான் ஆசை.!நடிக்க வந்த பிறகுதான் ஆசை அதிகமாகிடுச்சி.! ஆனால் அதுக்கு லக் ,பொறுமை வேண்டும்.”
“வாய்ப்பு கேட்டுப்போனா தப்பா நடக்க சொல்றாங்கன்னு தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி ஒரு வாரமா பிரச்னை பண்றாங்களே?”
“எந்த இடத்திலேதான் ‘காஸ்டிங் கவுச்’ நடக்கல.ஐ.டி.ல இல்லியா? மத்த ஆபிஸ்களில் இல்லியா? சினிமாவில் நான் அம்மாதிரியான சங்கடத்தை சந்திக்கல. நாம் பழகிற விதத்தில்தான் இருக்கு. பெண்கள் தப்பா பேசினா ஆண்கள் அதை சாதகமாக எடுத்துக்கலாம்.எச்சரிக்கையா பெண்ணு என்கிற எண்ணம் வந்திருச்சின்னா தப்பா பார்க்க மாட்டாங்க.
யாரோ ஒரு ஆள் பண்றதை டோட்டல் சினிமா மீது சொல்லிடக்கூடாது.” என்கிறார் பார்வதி நாயர்.