வார்டு கவுன்சிலரே முன்னாள் என்பதை பெருமையுடன் போட்டுக்கொள்ளும் போது பிரபஞ்ச அழகி சுஷ்மிதாசென் இப்போதும் அழகியென தெரிவது ஆச்சரியமில்லைதான்! அவர் எந்நாளும் நித்யகல்யாணிதான்!
கல்யாணம் இல்லை.
தத்தெடுத்த பெண் குழந்தைகள் வளர்ந்து ஆளாகி நிற்கின்றன. ஆனாலும் தாயாகிய சென்னின் இளமை மட்டும் உயர்ந்தே நிற்கிறது.
கல்யாணம் ஆகாவிட்டாலும் காதல் வராதா,? வரும்.! கண்டிப்பாக வந்தே தீரும்.அது ஹார்மோனின் விளையாட்டு.! ஆனால் வருகிற காதல் சன்னல் வழியாகவும் போகலாம்.புறவாசல் வழியாகவும் ஓடலாம்..அப்படி ஓடி இருக்கிறது சுஷ்மிதாவின் காதலும்!
காதலன் சாதாரண ஆள் இல்லை.பிரபல பாப் பாடகன் ரிக்கி மார்டின்! இளைய உலகத்தினரின் உதடுகளில் உட்கார்ந்திருந்தவன்.
சுஷ்மிதாவே சொல்கிறார் ,கேட்போம்.
“பருவம் தொடங்கிய நேரம் .எனக்கு வயது பதினெட்டு. முதன்முதலாக ரிக்கியை மெக்சிகோவில் லாஸ் பிரிஜாசில் சந்திக்கிறேன்! அப்போது ரிக்கியின் வயது 22.
இருவரது நட்பும் இளமையின் விளையாட்டு. பதின்ம பருவத்தின் கிளர்ச்சி என கடந்தது. தற்போது எனக்கு இரண்டு மகள்கள்.( தத்து.) ரிக்கிக்கு இரண்டு மகன்கள். எங்கள் பயணம் இனிமையுடன் இருந்தது.
ஆனால் எதுவரை?
ரிக்கி ஓரின சேர்க்கையாளர் என்பதை அவரே அறிவிக்கும் வரை!” என்கிறார் சுஷ்மிதா.
என்னே சோகம்!