“இவன்லாம் என்னத்தய்யா சாதிக்கப்போறான்” என்று போகிற போக்கில் புழுதி வாரி தூற்றுகிறவர்கள் கொஞ்சம் நஞ்சமா இருக்கிறார்கள்? அவர்கள் இல்லாத இடம் எங்கே இருக்கிறது?
இப்படித்தான் பத்ரு என்கிற அஜய் குமாரை அலட்சியம் செய்தார்கள் .தமிழ்ச்சினிமாவில் எத்தனையோ குள்ளமனிதர்கள் இருந்திருக்கிறார்கள்.அவர்களை வேடிக்கை மனிதர்களாகவே நாமும் பார்த்தோம். இண்டஸ்ட்ரியும் அப்படியே நினைத்தது. ஆனால் கேரளத்தவர் அப்படி நினைக்கவில்லை. உலகின் குள்ளமான நடிகர் என்கிற உலகசாதனை சிறப்பை பெற துணை நின்றார்கள்.
ஒரு கட்டத்தில் ‘குட்டியும் கோலும்’ என்கிற படத்தின் இயக்குநராகவும் தகுதி உயர்வு அளித்தனர். அதற்கும் விருது .
தற்போது ‘இளையராஜா’ என்கிற படத்தின் ஹீரோவாகவும் பக்ரு நடிக்கிறார். ஏப்ரல் 27-ம் தேதி திருச்சூரில் படப்பிடிப்புத் தொடங்குகிறது.