கவுன்சிலர் ஆனவன் காலாட்டிக்கொண்டே கலர் கலர் கனவுகளாக காண்கிறபோது தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு எப்படியெல்லாம் டிரெய்னிங் எடுக்க வேண்டும் என்கிற ஆசை இருக்காதா என்ன?
ரஜினி சி.எம்.ஆகி விட்டால் அவருடன் வேகமாக நடப்பதற்கு அதிகாரிகளே தனிப்பயிற்சி எடுத்தாக வேண்டும் .கமல் சி.எம்.ஆகிவிட்டால் அவரின் தமிழுக்கு பதவுரை விளக்க உரை எழுதுவதற்கு பயிற்சி எடுத்தாக வேண்டும்.இப்படி ஒரு நிலை வருமா?
வந்தாலும் வரும்யா,யார் கண்டது?
‘பாரத் அனே நானு’ என்கிற படத்தில் மகேஷ்பாபு சி.எம். ஆக நடித்திருக்கிறார். சக்கைப்போடு போடுகிறதாம். அந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் போட்டுக் காட்ட வேண்டும் என்பது மகேஷ்பாபுவின் ஆசை! அரசியலுக்கு வரப்போகும் ரஜினி படத்தைப்பார்த்து விட்டு நாலு வார்த்தை நல்ல வார்த்தை சொன்னால் கூடுதல் கலெக்சன் கிடைக்கும் என்பது அக்கட பூமி ஸ்டாரின் பெத்த ஆசை!