பாகுபலிக்கு பிறகு குறிப்பிட்டுச்சொல்லும் அளவுக்கு படங்கள் அமையாவிட்டாலும் அனுஷ்காவின் மார்க்கெட் மந்தமாக இல்லை. பிரைட்டாகவே இருக்கிறது.
ஆலோசனைக்கென தேடி வருகிறவர்களுக்கு உபயோகரமான டிப்ஸ்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார். மலையாள நடிகரான உன்னி முகுந்தனுக்கு பெண் வேஷம் எப்படி போடுவது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார்.
“சாணக்கிய தந்திரம் என்பது படத்தின் பெயர் அதில் எனக்கு ஐந்து விதமான வேஷம்.அதில் ஒன்று பெண் வேஷம்.கதை பிடித்திருந்தது ,என்னை இன்னொரு தளத்துக்கு கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கை இருந்தது.
ஆனால் பெண் வேஷம்தான் பிரச்னையாக இருந்தது. அனுஷ்காவிடம் பேசினேன்.பிரமாதமாக கெய்டு பண்ணினார். அந்த வேஷம் எனக்கு டாப்பாக அமைந்து விட்டது ” என்கிறார் முகுந்தன்.