நம்மூரு சிவாஜி-பத்மினி, ஜெமினி,-சாவித்திரி மாதிரி கடவுளின் தேசத்து பிஜூ மேனன்- சம்யுக்த வர்மா. இருவரும் காதல் நடிப்பில் டைட்டானிக் கப்பலையே புரட்டியவர்கள். அப்படியே நிஜ வாழ்க்கையிலும் கணவன் மனைவி ஆகி கரை ஏறியவர்கள்.
அதென்னமோ தெரியவில்லை கல்யாணத்துக்குப் பின்னர் படங்களில் கை கோர்ப்பதில்லை.!
ஏன் சார், ஏதும் உறுதிமொழி எடுத்திருக்கிறீர்களா?
” அப்படியெல்லாம் இல்லிங்க. ஆனா என் மனைவிக்கு நாம்ப ஒரு படமாவது பண்ணனும்கிற ஆசை இருக்கு! ஆசை இருந்து என்ன பிரயோசனம்? செட்டில் ஒர்க் அவுட் ஆகணும்ல? எங்களுக்கு எங்கேஜ்மென்ட் நடந்த நேரத்தில் மேகமலர் பட ஷூட்டிங். ஒருவரை பார்த்து ஒருவர் டயலாக் பேசணும்.
முடியல சார்! சிரிப்புதான் வந்தது. சீரியசான டயலாக்ஸ் .சிரிச்சா சரி வருமா? பல டேக் போனது.அதுக்குப் பிறகுதான் சேர்ந்து நடிக்க முடியல என்பதை உணர்ந்தோம்.”
“மனைவி சம்யுக்தா என்ன பண்றாங்க?”
“யோகா கிளாஸ் எடுக்கிறாங்க. அதில் அவங்க மாஸ்டர் !அவங்க கவனமெல்லாம்.அதில்தான்! அவங்க கிளாஸ்க்கு என்னை கம்பல் பண்ணிக் கூட கூப்பிடறதில்ல! அவங்களுக்குத் தெரியும் நான் லேசி மேன் என்பது!
எனக்கு இன்னொரு கெட்ட பழக்கம் இருக்கு. தூக்கத்தில் கனவு வரும். எல்லோருக்கும் வரும்தான் !ஆனா எனக்கு மட்டும் கிரிக்கெட் கனவாதான் வருது.கிரிக்கெட் டீமின் செக்யூரிட்டி ஆபீசர். ஹர்பஜன் சிங் ரூமில் ஏசி ஒர்க் பண்ணல. டோனிக்கு ஒரு பழைய வீட்டை கொடுத்தது ..இந்த மாதிரி வருது ! என்ன பண்ண சொல்றீங்க?” என கேட்கிறார் பிஜூ !
ஒன்னும் பண்ண முடியாது சார். பால் போடுற மாதிரி எதையாவது எடுத்து வீசி எதையாவது உடைக்காம இருந்தால் சரி!