‘சீக்கிரமே சினிமாவுக்கு வர்றேன்!’
கேட்டில் நின்று லவுட் ஸ்பீக்கர் வைத்து கத்தினாலும் அழைப்புக்கு பதிலே வராது. பின்பக்க சுவர் ஏறி குதித்து போனால் வீடு முழுக்க பூனைகள்.! தடுமாறி விழுந்தால் ஏதாவது ஒரு பூனை மாட்டிக் கொள்ளும் .அந்த அளவுக்கு பூனைகள்.கனகாவின் செல்லப் பிராணிகள்.!
இவரின் அப்பா உயிருடன் இருந்தபோதே இருவருக்கும் ஆகாது.
“இவளா என் மகள்? பைத்தியக்காரி” என்பார் அப்பா தேவதாஸ் .
“நீதான்யா எங்கம்மாவை சீரழித்தே!” என்று பதிலுக்கு பொங்குவார் கனகா.
இருவரையும் ஒன்று சேர்த்து வைப்போமே என்கிற நல்லாசியுடன் சினிமா முரசம் ஆசிரியர் இறங்கியபோது தொடக்கத்தில் இருவருமே இணக்கமாகத்தான் பேசிக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் இருவரது பேச்சும் சூடேறி செய்தியாகிபோனது.
தற்போது அப்பாவும் இல்லை !
என்ன செய்கிறார் கனகா!
“நான் செத்துப்போனதாக எழுதுகிறார்கள். சிலர் எனக்கு கேன்சர். அதனால் ஆலப்புழையில் ட்ரீட்மெண்ட் எடுத்துவருவதாக எழுதுகிறார்கள்.எல்லாமே பொய்” என கொதிக்கிறார் .
“சில காரணங்களுக்காகவே சினிமாவை விட்டு விலகி இருக்கிறேன். அந்த காரணங்களும் விரைவில் சரியாகிவிடும்.அதன்பிறகு சினிமாவில் கவனம் செலுத்துவேன் .எங்கம்மா தேவிகாவை நடத்தை கெட்டவள் என்றும் என்னை மனநோயாளி என்றும் சொன்ன ஆள்தான் எங்கப்பா. இதை ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்” என்கிறார் கனகா.
மாங்குயிலே,பூங்குயிலே வா!