தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பாலியல் ரீதியான மேட்டரை எடுத்து மிரட்டினால் நடிகை மாதவி லதா வேறு ஒரு மேட்டரை எடுத்துக் கொண்டு சினிமாக்காரர்களை விரட்டினார்.
“அந்த டாப் டைரக்டர் தெலுங்கு நடிகைகளை மதிப்பதே இ ல்லை. நான் கொஞ்சம் லேட்டா செட்டுக்கு போனாலும் காச்சு மூச்சென்று கத்துவார். ஆனா பாலிவுட் நடிகைகள் என்றால் வாய் திறக்கமாட்டார்.மரியாதை பொங்கி வழியும்.”என்று குற்றம் சாட்டுகிற அவருக்கு வாய்ப்புகளும் இல்லை.
சினிமா இல்லேன்னா என்ன அரசியல் இருக்கே அங்கே கை வரிசையை காட்டுகிறோம் என்று பா.ஜ.க.வில் சேர்ந்து இருக்கிறார்.