‘பாய்ஸ்’,உயிரே,உயிரே ‘,’சிக்கு புக்கு’, சுள்ளான்’ ஆகிய படங்களுக்கு பாடிய அந்த ‘அடர்த்தியான ‘உடம்பை அவ்வளவு சுலபமாக மறந்து விடமுடியாது. பாலிவுட்டில் இன்றும் பரபரப்பாக இருப்பவர் அட்னன் சாமி. தமிழில் பாட வந்தபோது 230 கிலோ எடை இருந்தார்.
“அடே சாமி! இதே ரேஞ்சில் போனால் இன்னும் ஆறு மாதம்தான் பாடிக்கிட்டு இருக்க முடியும்.அப்புறம் கதை முடிஞ்சிடும் .உடல் பயிற்சி.சாப்பாடு இவைகளில் கவனமாக இருந்து வெயிட்டைக் குறை” என்று டாக்டர்கள் கடுமையாக எச்சரித்த பின்னர்தான் 16 மாதங்களில் 167 கிலோ எடை குறைந்தார். இப்போது நன்றாக இருக்கிறார்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
கடந்த ஞாயிறு குவெய்த்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக குழுவினருடன் சென்றார்.
சென்ற இடத்தில் அதிர்ச்சி!
“இந்திய நாய்களா!”
குவெய்த் விமான நிலைய அதிகாரிகள் உதிர்த்த வார்த்தைகள்!
அதிர்ந்து போனார்.அட்னன் சாமி. அப்படியே இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இந்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கும் தகவல் தட்டி விட்டார்.
குவெய்த் நண்பர்களுக்கும் அதில் செய்தி! உங்கள் நகரத்துக்கு அன்பை சுமந்து வந்தோம்.விமான நிலையத்தில் இந்திய சகோதரர்கள் பாசமுடன் இருக்க தழுவினார்கள்.
ஆனால் குவெய்த் மக்களே! நீங்கள் ஆதரவு தரவில்லை..குவெய்த் விமான நிலைய அதிகாரிகள் எங்களை மரியாதைக் குறைவாகவே நடத்தினார்கள்.’ இந்திய நாய்கள்’ என்கிறார்கள். அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை.உங்களால் எப்படி இவ்வளவு ‘அரகன்சாக’ நடக்க முடிந்தது?”
அப்படியே இந்தியாவின் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்,சுஷ்மா ஸ்வராஜ் க்கும் டுவிட்டரில் தட்டி விட்டார்.
“சாமி , என்னுடன் போனில் பேசுங்க?” என்று சுஷ்மா கூற பேசி இருக்கிறார்.
என்ன பலன் கிட்டியது?