கதாநாயகனை கட்டி அணைத்து காதல் மொழி பேசி காலத்தை கடத்தி விடலாம் என பல நடிகைகள் கணக்குப் போட்டு படங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த நாயகனின் உதவி இருக்கிற வரை படங்களின் பட்டியல் நீண்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
அதுவும் தப்பில்லை. இது ஆண் ஆதிக்க சினிமா அல்லவா!
ஆனால் நயன்தாரா அப்படி இல்லை. பத்மனி,சாவித்திரி மாதிரி வித்தியாசங்களைத் தேடி அலைகிறவர். இலை போட்டு சாப்பிடுவதெல்லாம் விருந்து ஆகி விடுவதில்லை. பரிமாறப்படுகிற பதார்த்தங்களை வைத்துதான் விருந்து என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அதைப்போலத்தான் பெண்ணை முன்னிலைப்படுத்துகிற படங்களுக்கு முன்னுரிமை!
நயன்தாராவின் லேட்டஸ்ட் அவதார் போதைப் பொருள் விற்பவள்!
பொருளாதார நெருக்கடி.காலத்தின் கட்டாயம் அவளை அந்த தொழிலில் இறக்கி விடுகிறது. அதிலிருந்து மீண்டாரா, மாட்டினாரா என்பது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடம் கேட்கவேண்டும். இது தெலுங்குப்படம்!