வெளியில் தலைகாட்ட முடியவில்லை.வெயில் சுட்டெரிக்கிறது. அரசியல் அசிங்கம் நாற்றம் தாங்க முடியவில்லை. வறுமை,கொடுமை என எல்லா பக்கமும் மக்களை இம்சிக்கும் காலத்தில் இளையராஜா,ரகுமான் இப்படி இன்னும் சிலரின் இசைப்பாடல்கள்தான் கவலைகளை மறக்கடிக்கின்றன.
சங்கம் என்றால் சச்சரவு இல்லாமல் இருக்குமா? இருந்தாலும் அவ்வளவாக வெளியில் செய்திகள் கசிவதில்லை இந்த சங்கத்தில் !
அண்மையில் நடந்த சினிமா மியூசிசியன்ஸ் சங்கத் தேர்தலில் தலைவராக தினா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.செயலளராக சாரங்கபாணி, பொருளாளராக குருநாதன் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.