
” இயக்குநர் இலன் என்னிடம் கதை சொல்லும் போதே இந்த கதையின் இலக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் என்பதையும்,ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்து கொண்டேன்.ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தின் இயக்குனர் உட்பட அனைத்துக்கலைஞர்களின் உழைப்பை கண்டு பிரமித்து போனேன்.
ஹரிஷ் கல்யாண் இந்த படத்துக்கு பிறகு மிக பெரிய, அவருக்கே உரிய அந்தஸ்துக்கு உயர்வார்.ரைசா வில்சன் ரசிகர்களை நிச்சயம் கவர்வார். அவர்களுக்குள் இருக்கும் “chemistry” தான் “high on love” பாடல் இணைய தளத்தில் குறுகிய காலத்தில் 84 லட்சம் பார்வையாளர்களை சென்று பெரும் வெற்றி பெற காரணம் என்றால் மிகை இல்லை. பாடல் காட்சிகளுக்காக இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அசர்பேஜான் என்ற நாட்டுக்கு சென்றோம். காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது அசர்பேஜான் தான். காதல் தேசம் என்று அழைக்கலாம். அத்தனை அழகு. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள்.இந்த யுகத்துக்கு “பியார் பிரேமா காதல்” என்று நான் உறுதியாக கூறுவேன் என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
