கபாலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கரிகாலன்’ என்கிற ‘காலா’. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.வரும் ஜூன் மாதம் 7ம தேதி வெளியாகவுள்ள இப்படம்,தணிக்கை குழுவினரின் ‘யூஏ’ சான்றிதழ் பெற்றது என்பது தெரிந்ததே. தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் 164 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடும் வகையில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரஞ்சித் இயக்கிய முந்தைய படமான ‘கபாலி’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 153 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது