நடிகை ஹூமா குரேஷி காலா படப்பிடிப்பின் போது ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இப்படம் ரஜினி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.கபாலி படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் ஜூன் 7 -ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.இதில்,ரஜினியுடன் ஈஸ்வரிராவ் , ஹூமா குரேஷி ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.காலாவில் ரஜினியின் மனைவியாக நடிகை ஈஸ்வரிராவ் நடித்துள்ளார். காலாவின் காதலியாக ஹூமா குரேஷி வருகிறார். இந்நிலையில், ஹூமா குரேஷி தனது டிவிட்டர் பக்கத்தில் காலா படத்தில் தானும் ரஜினியும் நடித்துள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‘இனிமேலும் இந்தப் புகைப்படத்தை வெளியிட காத்திருக்க முடியாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்படத்தில் மும்பை தாதாவாக ரஜினி நடித்துள்ள ரஜினி, பெரும்பாலான காட்சிகளில் கருப்பு சட்டை மற்றும் கருப்பு வேட்டியுடனே காணப்படும் நிலையில், இப்புகைப்படத்தில் அவர் கருநீல சபாரி சூட் அணிந்து காணப்படுகிறார்.