“2015-ல் நான் நடித்தது எனக்குக் கடைசி மலையாளப்படம்னு நினைக்கிறேன். அதன் பிறகு வாய்ப்புகள் வரவில்லை.ஏனோ தெரியல” என்று மிகவும் வருத்தப்பட்டார் ரம்யா நம்பீசன்.
புதியவர்களுக்கு கேரளாவில் அதிக அளவில் தற்போது வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்களின் ஊதியமும் அவ்வளவாக அதிகம் இல்லை. இதுதான் காரணமாக இருக்குமோ என்னவோ!
ஆனால் தாயகத்தில் வாய்ப்புகள் இல்லாதிருப்பது நம்பீசனுக்கு வருத்தம்தான்.! ஆனால் தமிழ்நாட்டைப் பற்றி உயர்வாகவே சொல்கிறார்,
“ஒருதடவை திறமைசாலிகள் என மக்களால் ஏற்கப்படுகிறவர்களை தமிழகம் கைவிடுவதில்லை. அவர்களுக்குத் தகுந்த கேரக்டர்களை கொடுக்கிறது. தமிழ்,தெலுங்கு இரண்டுமே திறமைசாலிகளை கை விடுவதில்லை. ஆனால் மலையாளப்பட உலகம் அப்படி இல்லை.ஏன் என தெரியவில்லை” என்கிறார் நம்பீசன்.