கலைஞர் குடும்பம் .அரசியலும் கலையும் கலந்தே இருக்கும். மு.க.ஸ்டாலின் அரசியலில் தலைவர். மகன் உதயநிதி சினிமாவும் அரசியலும் கலந்து! இவரது மனைவி கிருத்திகா திரைப்பட இயக்குநர். அரசியலும் தெரியும்.
இவர் கணவருக்கு ஆலோசனை சொல்வது உண்டா?
“அதெல்லாம் எனக்கெதுக்கு? அவர் வழியில் அவர் போகிறார். அதற்கு எதற்கு ஆலோசனை. தலையிடமாட்டேன். அதைப்போல எனது திரைப்பட வேலைகளிலும் அவர் தலையிட மாட்டார்.அவரவர் வழியில் போய்க்கொண்டு இருக்கிறோம். ஒருவர் வேலையில் மற்றவர் தலையிடுவதில்லை.”என்கிறார் கிருத்திகா.