ஆறுதல் சொல்வதில். நேரில் சென்று தேறுதல் அளிப்பதில் தளபதி விஜய்யின் பாணியே தனிதான்!
கொஞ்சம் கூட சினிமா சாயம் இல்லாமல்தான் செல்வார். விளம்பரம் விரும்பமாட்டார். தன்னுடன் வீடியோகிராபரை அழைத்துச்செல்வதில்லை. விரும்ப மாட்டார். ஆனாலும் பத்திரிகையாளர்களில் யாராவது ஒருவர் விழித்துக் கொண்டு இருக்க மாட்டாரா என்ன? ஆளுக்கொரு செல் வைத்திருக்கும் காலம் இது.
காரில் செல்லக்கூடிய இடங்களுக்கு காரிலும் ,கார் செல்ல முடியாத இடங்களுக்கு பைக்கிலும் சென்று தூத்துக்குடியில் ஆறுதல் சொல்லி இருக்கிறார் விஜய்.
துப்பாக்கிச்சனியனுக்கு இரையாகியவர்களின் வீடுகளுக்கு உறவினர்களில் ஒருவராக சென்று துக்கத்தில் பங்கெடுத்திருக்கிறார்.
ரஞ்சித்குமார்,தங்கையா,மணிராஜ்,தினாகார்த்திக், ஸ்னோலின்,அந்தோணி செல்வராஜ், கிளஸ்டன், ஜான்சி,காளியப்பன், ஆகிய ஒன்பது பேர் வீடுகளுக்கும் சென்றிருக்கிறார்,
“நான் அங்கு வருவது யாருக்கும் தெரியக்கூடாது. சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்தால் போதும்” என்று தனது மன்றத்தினருக்கு கண்டிப்பாக சொல்லிவிட்டுத்தான் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார், சென்னையிலிருந்து காரிலேயே பயணம்.
ஒவ்வொருவர் வீட்டிலும் உரிமையுடன் தரையில் அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது அவர்களுக்கு ஆறுதல் சொல்லியிருப்பார். அங்கிருந்து புறப்படும் தருவாயில் கையில் லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்.
“பெத்த பிள்ளை மாதிரி வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போகுதே ! நேரம் பிந்தி வந்திட்டேம்மா. மன்னிச்சிக்கிங்கன்னு சொன்னுச்சு”என்றுதான் ஒவ்வொருவர் வீட்டிலும் கண்ணீர் ததும்ப சொல்கிறார்கள். விஜய்யிடம் சீனியர் நடிகர்கள் எவ்வளவோ கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. விளம்பரம் இல்லாமல் அடுத்தவருக்கு உதவுவது என்பது அறிய பெரிய குணம்.