‘டிராபிக் ராமசாமி ‘என்பது தற்போது இந்திய அளவில் எதிர்பார்க்கப் படுகிற திரைப் படமாகிவிட்டது.
தனிமனிதனாக நின்று ஊழலையும் அரசையும் எதிர்த்து வருகிற வயதான மனிதர்தான் டிராபிக் ராமாமி. எழுபதுகளை கடந்து விட்டவர். இன்னமும் போலீஸ் வன்முறையின் அடையாளங்களை உடம்பில் தாங்கி இருப்பவர்,இவர் மூதறிஞர் ராஜாஜியின் சீடர். பிராமண குலத்தவர். தமிழ் வாழ்க தமிழன் உயர்க என முழக்கமிடுகிறவர் .வாழ்ந்து கொண்டிருக்கிற போராளி.! இவரது வாழ்க்கையை சட்டசேகரன் எனப்படுகிற எஸ்.ஏ.சந்திரசேகரன் திரைப்படமாக எடுத்திருக்கிறார், இவரது உதவியாளர்தான் விக்கி. அவர்தான் படத்தின் இயக்குநர் .டிராபிக் ராமசாமியாக நடித்திருக்கிறார் எஸ்,ஏ,சந்திரசேகரன்,.
அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அரங்கம் கொள்ளா அளவுக்கு மாநாடு மாதிரி நடந்து விட்டது, எஸ்,ஏ,சி,யின் மாணவர்களான இயக்குநர்கள் ஷங்கர், ராஜேஷ்,பொன்ராம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தாலும் மையப்புள்ளிகளாக இருந்தவர்கள் கவிப் பேரரசு வைரமுத்து, இயக்குநர் ஷங்கர் இருவரே!
வரவேற்புரையாக பேசினார் சந்திரசேகரன்.
“நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றுகவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது? என்றவர் ,எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா, சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர்.
.உலகமே வியக்கும் ஷங்கருக்கு மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன்என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர்.அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று
நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.
இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை.
போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால்கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. ?
காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . ? தூத்துக்குடிபோராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது ? போராட வேண்டாம் என்று சொல்வதுபைத்தியக்காரத்தனம் . டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக்
கொண்டேன்.” என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.
இயக்குநர் ஷங்கர் பேசும் போது ” இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்தமனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப்பார்த்து நான்மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.எனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன் . வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம் . இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க
நான் காத்திருக்கிறேன்.” என்றார்.