” பத்து செகண்ட் முத்தத்தை பத்து நிமிஷமாக மாத்தக்கூடாதா? “என்றால் இயக்குநர் வின்சென்ட் செல்வா கையமர்த்துகிறார்.
“கூல்..கூல் ! புத்தகத்தின் அட்டையை மட்டும் வைத்து, அதை மதிப்பிடக் கூடாது. அதுபோலத்தான் படத்தின் தலைப்பை வைத்தும் மதிப்பிடக் கூடாது. பல்வேறு கோணங்கள் இருக்கும். பத்து செகண்ட் முத்தம் என்ற தலைப்பு நம்மை பலவாறு யோசிக்க வைத்து, ஒரு முடிவுக்கு கொண்டு வரும். எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களை தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்த தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள். சுஜாதா சாரின் பத்து செகண்ட் முத்தம் நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களை கண்டுபிடிப்பதை சொல்வது தான். அந்த தலைப்பு என்னை ஈர்த்தது, என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களை கண்டுபிடிப்பார், அதனால் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட்.” என்கிறார்.