கருத்து வேறுபாடு, சண்டை,பிரிதல் பின்னர் இணைதல் என்பது எல்லாமே குடும்பத்தில் நிகழ்வதுதான்.அதைப்போலத்தான் சினிமாவிலும்!
‘யோகன் அத்தியாயம் ஒன்று ‘ கதை இயக்குநர் கவுதம் மேனன் -தளபதி விஜய்யை இணைப்பதாக இருந்தது,
கதை பிடிக்கவில்லை !
“வேறு கதை பண்ணலாம்னு சொல்லிட்டார். அதுக்குப் பிறகு விஜய் சாரை மூணு தடவை சந்தித்துவிட்டேன்,விரைவில் அவருடன் இணைகிற வாய்ப்பு உருவாகும். அந்தப்படம் போலீஸ் கதையாக இருக்காது, லவ், எண்டர்டெயின்மென்ட்,ஆக்சன் கலந்த படமாகத்தான் இருக்கும்” என்றார் கவுதம் மேனன்.
சூரியாவுடனும் கதை பிடிக்காததால் வெளியே வந்தவர்தான் மேனன்,
“நான் சூரியாவுடனும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.எல்லாமே சரியாக நடக்கும் பட்சத்தில் அவருடனும் படம் பண்ணுவேன். இப்போது மிகவும் பிசியாக அடுத்தடுத்து படங்கள் பண்ணிக்கொண்டு இருக்கிறார்,அனேகமாக 2019-ல் நாங்கள் இருவரும் இணைந்து படம் பண்ணலாம், தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் பிசியாக இருக்கிறேன்” என்கிறார் கவுதம் வாசுதேவ மேனன்
இவரது ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா?’ என்ன ஆனது?