” நேத்திக்கி நீயும் நானும் குடல் கறியும் இட்லியும் சாப்பிட்டமா , இல்லையா ? உங்கம்மா மேல சத்தியம் பண்ணு நாம்ப சாப்பிடலேன்னு?” என்று சின்னப்பசங்க கேட்டுக்கொள்வது மாதிரி “எங்கூட படுக்கலேன்னு உங்க அம்மா மேல சத்யம் பண்ணுவியா ?” என்று கேட்டிருக்கிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி,
ஒரு பெண்ணின் அந்தரங்கம் இந்த அளவுக்கு சின்னப்பிள்ளைத் தனமாக புழுதியில் புரளனுமா? நடிகர் நானி தெலுங்கு தேசத்தை தாக்கிப் பேசியதால் நடிகையை தனது கை ஆயுதமாக அந்த கட்சி பயன் படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டு புதிதாக எழுந்திருக்கிறது,இனியும் சும்மா இருந்தால் நடிகையின் குற்றச்சாட்டு வலுப்பெற்று விடும் என்று கோர்ட்டில் மான நட்ட வழக்கு போட்டிருக்கிறார் நானி.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகையை ஓரம் கட்டியதால் நானி மீது காட்டம் என்கிறார்கள்.
கேவலமாக இருக்கு!