உலக அளவில் ஆண்கள் மீது பாலியல் வன் கொடுமைச்செய்திகள் வந்து கொண்டிருக்கிற காலத்தில் பச்சை மிளகாயை அரைத்து பாலில் கலந்து கொடுத்திருக்கிறார் ரவி கிஷன்,பிரபல வில்லன் நடிகர்.
எல்லாம் நடிகை ஸ்ரீ ரெட்டியின் கைங்கர்யம். முண்டாசு கட்டாத முரட்டுப் பெண்ணாக சவால் விட்டு பெரிய பெரிய ஹீரோக்களை நடு வீதியில் நிறுத்தி நார் நாராக கிழித்து எறிந்திருக்கிறார். அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
பெண் தப்பாகவே நடந்தாலும் ஆதரவு என்னவோ புடவைக்குத்தான்!
“பாவம் பொம்பளை “என கரிசனம் பொங்கும்.
ஆனால் பிரபல வில்லன் நடிகர் ரவி கிஷன் நான் வருகிறேன் என்று ஹீரோக்களுக்கு கை கொடுத்திருக்கிறார்.
“நடிகர்களை படுக்க அழைத்த நடிகைகளை எனக்குத் தெரியும். ஆனால் ஏனோ அது வெளியில் வருவதில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை” என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் யாராவது அவரைப் போல துணிவுடன் சொல்ல முடியுமா?