சாது மிரண்டா,அரவான், துணை முதல்வர்,இணையதளம் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் சுவேதாமேனன், மலையாள தேசத்து மாங்கனி. சிறந்த நடிகை.பல விருதுகளை அள்ளியவர். புருசனுக்கு மும்பையில் பணி.அதனால் அங்கேயே தங்கிவிட்டாலும் மலையாளத்தில் படு பிசி.
மலையாள தேசத்து நடிகர் சங்கத்துக்கு புதிய தலைவராக மோகன்லால் தேர்வு செய்யப்பட்டதால் சுவேதா மேனனை சங்கத்தின் எக்சிகியூட்டிவ் மெம்பராக நியமித்திருக்கிறார்.
இதில் யாருக்கு என்ன வலியோ?
போனில் சுவேதாவை அழைத்து சகட்டுமேனிக்கு விட்டிருக்கிறார். இவருடன் மேலும் பலரும் திட்டி தீர்த்திருக்கிறார்கள்.
போலீசுக்கு போய்விட்டார் சுவேதா .
மாட்டினார்கள் .பிரபலமும் சிக்கினார்
“நான் அவருக்கு அட்வைஸ் பான்னித்தான் பேசினேன்.வேறு நோக்கம் எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
சுவேதா தரப்பில் வழக்குப் போட வில்லை.அதனால் பிரபலத்தை விட்டு விட்டார்கள்.
இதுவும் காலம்தான்!