காலா படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்காக ரஜினிகாந்த் டார்ஜிலிங் சென்றுள்ளார் அங்கு கடந்த 11 ந்தேதி முதல் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சன் பிக்ஸர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.இதில் முக்கிய கேரக்டரில் சிம்ரன், விஜய் சேதுபதிஆகியோர் நடிக்கிறார்கள். பாபி சிம்ஹா, ‘ஜில் ஜங் ஜக்’ சனந்த் ரெட்டி ஆகிய இருவரும் ரஜினியின் மகன்களாக நடிப்பதாக கூறபடுகிறது. யோகிபாபு,முனீஸ்காந்த் காமெடியன்களாக கமிட் செய்யப்பட்டுள்ளனர்.
. இப்படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடிக்கும் ரஜினிகாந்தை வித்தியாசமாக காட்ட வேண்டுமே என்று நினைக்கும் போது கவலையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது என்று ஏற்கனவே தெரிவித்திருந்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது இயக்குனர் ஷங்கரின் பாணியை கையில் எடுத்துள்ளாராம். அதாவது ரஜினிகாந்தின் எந்த ஒரு கெட்டப்பும் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பில் இருப்பவர்கள் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன், தனியார் பாதுகாவலர்களும் போடப்பட்டுள்ளார்களாம். அடையாள அட்டை யை சரிபார்த்த பிறகே படப்பிடிப்புதளத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்களாம்.இந்நிலையில் இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ள ரஜினியின் ஒரு கெட்டப் காட்சி படமாக்கப் பட்டபோது,எப்படியோ விஷயம் தெரிந்து சில ரசிகர்கள் அங்கே கூடிவிட்டார்களாம்.இதனால் படப்பிடிப்பை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றி விட்டனராம்.. அத்துடன் படப்பிடிப்புத் தளத்தில் ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.மேலும் லொகேஷன் ஷிப்டிங் என்பது கூட படக்குழுவுக்கு ஐந்து நிமிடம் முன்பு தான் சொல்லப்படுகிறதாம் .