“ஏசி தானே, தங்குறது ஒத்த ஆளா இருந்தாலும் படுத்து பொரள்றதுக்கு டபிள் பெட் ரூம்தான் வசதி” என்று காமடி நடிகர்களே டிமான்ட் பண்ணுகிற காலத்தில் “ஒரு ஃபேன் சிங்கள் பெட் இருந்தால் போதும் ராசா அது போதும்”என்று சொல்கிற டாப் ஹீரோவை பத்தி கேள்விப் பட்டிருக்கிங்களா?
அது தல அஜித் தானுங்க!
இயக்குநர் சிவா, சத்யஜோதி தியாகராஜன் இருவருக்காக மட்டுமே தனி உழைப்பை விஸ்வாசம் 2 படத்தில் போட்டுக் கொண்டு இருக்கிறார் அஜித்.
அஜித் படம் என்பதால் நயன் கதையே கேட்கவில்லை என்கிற கதை ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. அரை மணி நேரம் கதையைக் கேட்டுவிட்டுத்தான் ஒப்புக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. இது மட்டுமல்ல இவரது கால்ஷீட் தேதிக்கு தகுந்தபடிதான் செகண்ட் செடியூலே நடக்க இருக்கிறது.
ராஜமுந்திரி,ஹைதராபாத் என்று மாறி மாறி இரண்டு இடங்களில் சிவா ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்தார்,அதற்கேற்ப இரண்டு இடங்களிலும் அஜித்துக்கு அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. சில காரணங்களால் ராஜமுந்திரியில் நடத்த வேண்டிய படப்பிடிப்பை ஹைதராபாத்திலேயே எடுத்துவிடலாம் என்று முடிவு செய்து விட்டனர்,
ஆனால் அஜித்துக்கான அறை முன்னதாகவே பதிவு செய்யப்படவில்லை. அந்த அறையை பாலிவுட் ஹீரோ ரன்வீர்சிங்குக்கு ஒதுக்கி விட்டனர்,
தகவலை மெதுவாக தல காதில் போட “அதுக்கென்ன சிங்கிள் பெட் ,ஒரு ஃபேன் இருந்தால் போதும்யா” என்று சொல்லி இருக்கிறார் அஜித்.