காத்தே போகாத கழிவறைக்குள் போட்டு அடைத்துவிட்ட நிலையில் மூச்சு விடத் திணறிக் கொண்டு இருக்கிறது ஆந்திரத் திரை உலகம். ‘பிரதர்ஸ்,அண்ட் சிஸ்டர்ஸ்’ என்று விவேகானந்தர் வரலாறு படைத்த சிக்காகோவில் நமது பெருமையை கொத்திப்போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் நடிகைகள். ஐந்து பேர்தான் மாட்டினார்கள் என முதலில் வந்த செய்தியின் கழுத்தை நெரித்துப் போட்டிருக்கிறது அண்மைச்செய்தி!
76 நடிகைகள் விபசாரத்தில் சிக்கி இருக்கிறார்கள் என்கிறது சிக்காகோ போலீஸ்!
ஆந்திரத்தின் பெருமைகளை அந்நிய நாட்டில் அடித்து நொறுக்கிய பெருமைக்குரிய ராம் கிஷன்-சந்திரகலா தம்பதியின் சாகச விளையாட்டில் மாட்டிய நடிகைகளின் எண்ணிக்கை இன்னும் உயருமா ? தெரியல.
அமெரிக்காவுக்கு போன ஒரு நடிகையை சிக்காகோ போலீஸ் அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள். சொந்த வேலையாக போன அந்த நடிகை விசாரணை வளையத்தில் மாட்டி விழி பிதுங்கி இருக்கிறார் .என்னெனவோ கேள்விகள்.அந்த விசாரணையில்தான் எண்ணிக்கை விவரம் தெரிந்திருக்கிறது
“அந்த எழவெடுத்த கேள்விகளை எல்லாம் எங்கிட்ட ஏன்யா கேக்கிறீங்க?” என்கிற எரிச்சல்.ஆனால் வெளியில் காட்ட முடியுமா?