‘அடிமடியிலே கை வை’, ‘ஓங்கிக்குத்து அது டப்பாங்குத்து’ என்றெல்லாம் வெறி கொண்டு சிந்தித்து படத்துக்குத் தலைப்பு வைத்து விடுவார்களோ என்கிற பயத்தில் கிடக்கிறார்கள் ரசிகர்கள். இப்படி எல்லாம் அச்சப்படுகிறார்களே என்று படத்தை முடித்து விட்டு பெயர் வைக்கிற கலாசாரம் கோலிவுட்டில் இருக்கிறது. பெரும்பாலும் உச்ச நடிகர்களின் படப் பெயர்கள்தான் இப்படி தனித்த வரவேற்பு பெறுகின்றன.
இது நாள் வரை விஜய் 62 என சொல்லப்பட்ட படத்துக்குப் பெயர் சூட்டும் விழா நாளை மறுநாள் 21 -ம் தேதி நடக்கிறது, 22- ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்த நாள் .தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை காரணமாக அவரும் அவரது ரசிகர்களும் பிறந்த நாளை கொண்டாடவில்லை.
ஒரு நேர்மையான மனிதனுக்கும் இரண்டு ஊழல் அமைச்சர்களுக்கும் இடையில் நடக்கிற கதைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்களோ?
தலைவராகிறார் தளபதி!