ஹைதராபாத்தில் மதுரை மல்லிப்பூ மணக்கிறது. தல அஜித்தின் விசுவாசம் கதை மதுரை ஏரியாவாம்.!இடைவிடாமல் ஷூட்டிங் ராஜமுந்திரி,ஹைதராபாத் என தொடர்ச்சியாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
” படத்தில் ஐந்து பைட். அத்தனையும் ரணகளம். இப்ப ஒரு பைட் முடிஞ்சிருக்கு.இன்னும் நாலு இருக்கு” என்கிறார் மாஸ்டர் திலிப் சுப்பராயன்.
தற்போது அஜித் நயன் தொடர்பான காட்சிகளை இயக்குநர் சிவா படமாக்கி வருகிறார்.
காதலர் விக்னேஷ் சிவனை நாயகனாக களமிறக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள். நயனிடம் கதை சொல்ல வருகிறவர்களிடம் ‘விக்கிக்கும் கதை இருந்தால் சொல்லுங்கள்.’ என்கிறாராம்.
விக்கியிடமே நிறைய கதைகள் இருக்குமே !