
வீட்டில் இருந்தபடியே, மக்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் ரிங் ஆப்ஸ் என்ற செயலியை ஆண்ட்ராயிடு, ஐ.ஓ.எஸ் என இரண்டு வடிவத்திலும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் .ஹோசிமின்.
இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் பரத், ரேணுகா மேனன் நடித்த பிப்ரவரி 14 , சத்யராஜ், சாந்தனு, சனா கான் நடித்த ஆயிரம்விளக்கு ஆகிய படங்களை இயக்கியவர். இவரது அடுத்த திரைப்படத்துக்கான பணிகள் நடந்துவரும் நிலையில், இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.
இன்றைய கால கட்டத்தில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை நட்சத்திரங்கள் ரெஸ்டாரண்ட், கிரிக்கெட், கால் பந்து அணி, ஆன்லைன் வர்த்தகம் என வெவ்வேறு துறைகளில் ஷாருக் கான், சிரஞ்சீவி, ஆர்யா, ஜீவா, அனிருத் எனப் பலரும் கால் பதித்து சாதித்து வருவது டிரெண்ட் ஆகி வருகிறது. அதே போல இயக்குனர் .ஹோசிமின் தொழில்நுட்பத்தின் மேல் கொண்ட ஆர்வத்தால் தனது இன்டர்நெட் நிறுவனத்தின் கீழ் புதிய ஆப்சை துவக்கியுள்ளார்.
நமது அன்றாட தேவைகள் எதுவாக இருந்தாலும் அதை உடனே குறித்த நேரத்தில் திறம்பட செய்து முடிக்க ஒரு நம்பிக்கையான நபரை நாம் தினமும் தேடுகின்றோம் அல்லது நமக்கு தெரிந்தவர்களிடம் அப்படிப்பட்ட யாராவது இருக்கின்றார்களா என கேட்கிறோம் இது வாடிக்கை. ஆனால் நமது நேரத்தில் நமது பணிகளை நாம் நினைத்தவாறு குறைந்த கட்டணத்தில், குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிக்க ஆள் கிடைப்பதில்லை. இந்த கவலை இனி தேவையில்லை. ஏனென்றால் ரிங்கா ஆப் இனி உங்களுக்கான பணியாளை உடனே தரும்.!
அனைவரையும் ஊக்குவிக்கும் மனப்பான்மை கொண்ட இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் நடிகர் சத்யராஜ் ஆகியோரிடம் நல்லாசி பெற்று இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.












