கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வராவிட்டாலும் நடிகைகள் வரத்து அதிகமாகவே இருக்கிறது. இன்னொரு ராதிகா பிரித்தி வந்திருக்கிறார்.சரளமாக தமிழ் பேசும் இவர் எம்பிரான் படத்திற்கு டப்பிங் பேசிஇருக்கிறார்,. இவரின் அப்பா கர்நாடகா அம்மா தமிழ்நாடு. இவருக்கு தமிழ் மீதும் தமிழ் படங்கள் மீதும் அதீத காதல். அப்படியே ஒரு மணாளனையும் இங்கேயே வரித்துக் கொள்ளலாம்.
தமிழில் வெளிவரவுள்ள எம்பிரான் படத்தை தான் அதிகம் எதிர்பார்க்கிறாராம் தமிழ் அதிக படங்கள் நடிக்க ஆசைப்படும் இவர் மாடர்ன் பெண்ணாக நடிப்பேன் ஆனால் கிளாமராக நடிக்க மாட்டேன் என்கிறார் . நல்ல கதையோடு வரும் தமிழ் இயக்குநர்களுக்காக காத்திருக்கிறேன் என்கிறார்.
இப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கி இருக்கிறார்
பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த ‘பிரசன் பாலா’ இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து,
நடனம் தீனா மற்றும் விஜி.
இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.