ஏ எம் என் குளோபல் குரூப் குழுவானது, ஏ எம் என் பைன் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி “ஸ்கூல் கேம்பஸ்” என்ற திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. மேனேஜிங் டைரக்டர் டாக்டர் ஆர் ஜே.ராமநாராயணா இந்த படத்தினை இயக்கி , தயாரிப்பது மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை சந்தோஷ் குமார் மால் (மாவட்ட ஆட்சியர் )தொடங்கி வைத்தார்,இந்தியக் கல்வியில் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சொல்லும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.
நாகேஷ் அவர்களின் பேரனும், ஆனந்த் பாபு வின் மகனான கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
”தேனிசை தென்றல் ” தேவா இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். ஆஷா போஷ்லே , .சுசிலா மற்றும் . பாலசுப்ரமணியம் ஆகியோர் பாடியுள்ளனர்.
கீர்த்தி ,மற்றும் காயத்ரி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.