துணிந்து கருத்துகளை சொன்னதற்காக உலக நாயகனையும் தளபதியையும் பிழிஞ்சி காயப்போட்ட அரசியல்வாதிகள் இருக்கிற ஊர்ல ”அண்ணனுக்கு ஜே” அரசியல் படமா?
வாங்கப்பா இப்படி வரிசையாக கிளம்பி வந்து ஆளுக்காள் குடைச்சல் கொடுத்தாவது நாட்டை சீர்ப்படுத்தபாருங்க,!
இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் 20th செஞ்சுரிபாக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் அண்ணனுக்கு ஜே.
தற்கால அரசியலை நையப் புடைத்திருக்கிறார்களாம், அதுக்கு இந்த அட்டக்கத்தி தினேஷ் சரிப்பட்டு வருவாரா? ராதாரவி மயில்சாமி இவர்கள் செம கிண்டு கிண்டுவார்கள். அதில் சந்தேகம் இல்லை.. மஹிமா நம்பியாருடன் தினேஷ் உருண்டு புரண்டு போகட்டுமே என்று சேர்த்திருக்கிறார்கள் போலும்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்குமார். ஆசிட் தொட்டு எழுதுங்க. அப்பத்தான் அரசியல் வாதிகளுக்கு சுரீர் என்றிருக்கும்.இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இத்திரைப்படம் ஆகஸ்டு 17 வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.