இம்சைஅரசன் விவகாரம் முடிவுக்கு வந்தது! பணிந்தார் வடிவேலு!!

சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் துவங்கினர். 24ம் புலிகேசி என்று பெயர் வைத்து ரூ. 7 கோடியில் செட் போட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள். முதல் பாகத்தை போன்றே இதிலும் வடிவேலு தான் கதாநாயகன்..10 நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சிம்புதேவன், வடிவேலு மற்றும் இடையே பிரச்சனை ஏற்பட்டு படம் நின்றது. ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க நடிகர் வடிவேலு மறுத்ததால்,தனக்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்ட , நஷ்டஈடாக ரூ. 9 கோடி வடிவேலுவிடம் வாங்கித் தருமாறும், அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடிகர் சங்கம் சார்பில் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.இம்சை அரசன் படத்தில் நடித்துக் கொடுக்கும்படியும், நடிகர் சங்க பிரதிநிதிகள் அவரிடம் வற்புறுத்தி வந்தனர். ஆனாலும் வடிவேல் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்காததால் தனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது என்றும், தற்போது வேறு படங்களுக்கு தேதி ஒதுக்கி நடித்து வருவதால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க முடியாது என்றும் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி யதாக கூறப்பட்டது. மேலும் நஷ்டஈடு கொடுக்கவும் அவர் தயாராக இல்லை.ரூ. 9 கோடி கொடுக்காவிட்டால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கும் நிலையும் ஏற்பட்டது. தனது முடிவை அறிவிக்க அவருக்கு இரண்டு வாரகால அவகாசமும் கொடுக்கபட்டது. இந்நிலையில் அவர் மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதன் மூலம் இடியாப்ப சிக்கல் பிரச்னைமுடிவுக்கு வருகிறது.விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த நேரமும் விஷால் தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகலாம் என்கிறது தயாரிப்புசங்கத்தரப்பு!