“சென்னைபட்டிணப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுவரையில் எந்த அதிகாரிகளும் வந்து மக்களை சந்திக்கவில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே வந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று விசில் செயலியில் வந்த புகாரின் பேரில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் பாதிப்படைந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.