“சின்னத்திரை படங்களுக்காக பெப்சி தொழிலாளர்கள் அளித்து வருகிற சலுகைகளை பிக்பாஸ்க்கும் அளிக்க முடியாது” என்பதாக பெப்சி தொழிலாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான அங்கமுத்து சண்முகம் தலைவர் செல்வமணியின் அனுமதியின் பேரில் இதை தெரிவித்தார்.
“பிக்பாஸ் நிகழ்ச்சியை சின்னத்திரை சீரியல்களுடன் ஒப்பிடமுடியாது. சினிமாவை விட மிகப்பெரிய லாபத்தை பிக்பாஸ் ஈட்டுகிறது, அதற்கேற்பத்தான் ஊதியம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக வருகிற சனிக்கிழமை 30 ம் தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடக்கும்” என்று சொன்னார்.