குலதெய்வத்துக்கு முடி காணிக்கை தலைப்பிள்ளைக்காக!
‘காப்பாத்தி விட்டுட்டய்யா ,பிடி என்னால் முடிந்தது இதுதான்யா ‘என்று முடி இறக்குவது , பாஸ் பண்ணினதுக்காக சில பேர் கொடுக்கிற காணிக்கை. சில பேர் சாமிக்கு கல்யாணம் பண்ணி வைப்பாய்ங்க. சிலர் சிம்பிளா அறுபது ரூபா அர்ச்சனத்தட்டுக்கு பத்து ரூபா அர்ச்சனை சீட்டுக்கு, அய்யருக்கு தட்சணை பத்து ரூபா இப்படி காரியத்தை முடிச்சுக்குவாங்க,
திரைப்படம் சார்ந்தவர்கள் பெரும்பாலும் மாலவன் குன்றம் செல்வதுதான் அதிகம்.தல அஜித் ஒவ்வொரு படத்துக்கும் திருப்பதி போயிட்டு வருவார். ஆனால் ‘கண்ணே கலைமானே ‘இயக்குநர் சீனு ராமசாமியும் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனும் திருச்செந்தூருக்குப் போய் திருமுடி எறக்கி விட்டு திரும்பி இருக்கிறார்கள்.உதயநிதி, தமன்னா நடித்திருக்கிற ரெட்ஜெயண்ட் மூவீசின் படம் பிரமாதமாக வந்திருப்பதால் இந்த காணிக்கை.
அங்க பனங்கருப்பட்டி பேமஸ் ,
வாங்கியாந்தேளா?