கோலிவுட்டில் யாரை சந்தித்தாலும் இயக்குநர் ராமை புகழ்ந்து தள்ளுகிறார்கள். மம்மூட்டி.அஞ்சலி நடித்திருக்கும் ‘பேரன்பு’படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் பாராட்டுகளையும் அள்ளி வந்திருக்கிற படம் .இன்னும் இங்கு திரையிடப்படவில்லை. முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.சீன மக்கள் எழுந்து நின்று பாராட்டிய படம்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது நினைவுப்பெட்டகத்தில் இடம் பெற்றுவிட்ட படம் என புகழ்ந்திருக்கிறார். நடிகர் சித்தார்த் இந்த படத்தைப் பார்த்த பிறகு பல நாட்கள் அந்த படத்துடனேயே வாழ்ந்திருப்பதாக சொல்லிவிட்டு ‘மம்மூட்டி சாரின் மாஸ்டர் பீஸ் பேரன்புதான்”என உச்சி குளிர்ந்திருக்கிறார். யுவனின் இசை .15-ம் தேதி வெளியீட்டு விழா வைத்திருக்கிறார்கள்.