“கதை என்னங்க?”
“இருந்தாத்தானே சொல்றதுக்கு?”
“நீங்க இன்னும் பாகவதர் காலத்தில்தான் இருக்கீங்க.இப்பல்லாம் கதை எழுத நேரம் கிடையாது. ஏதாவது ஒன்னு ரெண்டு பேர்தான் கதை சொல்வாங்க”
“கரெக்ட் .தமிழ்ப்படத்தில என்னன்னா பழைய படங்களையெல்லாம் நக்கல் ,நையாண்டி பண்ணிருக்காங்க .கமல்,விஜய்,அஜித் ,விக்ரம் ,சூர்யா ,சசிகலா,ரிசார்ட் எம்.எல்.ஏ.க்கள் இவங்கதான் டைரக்டரின் போதைக்கு ஊறுகா. ரெண்டரை மணி நேரமா படம் பார்த்தும் என்ன சொல்ல வந்தாய்ங்கன்றது தெரியல!இடுப்பு வலி வந்ததுதான் மிச்சம்!
“நக்கல் நையாண்டி பண்றதுக்கு கதை எதுக்கு?”
“அதுவும் சரிதான்.மிர்ச்சி சிவா கருத்து சொல்லி பூகம்பத்தையா கிளப்ப முடியும்? .ஆனா இவர் டைரக்டருக்கு கைத்தடி மாதிரி. முகத்தில உணர்ச்சியே இல்லாம காமடியா பேசி சிரிக்க வச்சிடறாரு.!”
“ஹீரோயின்ஸ் ?”
“ஐஸ்வர்யாமேனன்,திஷா பாண்டே. இவங்கள வச்சு ஒட்டவும் முடியாம வெட்டவும் முடியாம திண்டாடி இருக்காங்க. வர்றாங்க, போறாங்க,! இன்னொரு கொடுமை என்னன்னா கஸ்தூரியை அயிட்டம் டான்சரா ஆடவிட்டது.!!! ”
“காமடிப்படம்தானே …அதான் அப்படி.ஆனாலும் பாவம் கஸ்தூரி!”
“சமாதியில கலைராணியை விட்டு சத்தியம் பண்றது, தியானம் பண்றது,ரிசார்ட்ல எம்.எல்.ஏக்கள் கூத்தடிச்சது மாதிரி நடப்பு அரசியலை வச்சே படம் பண்ணிருக்கலாம். என்னமோ அவங்க விதி. படத்தில் ஒரு வசனம் வரும் “டிரைய்லர் நல்லா இருக்கும் ஆனா படம் மொக்கையா இருக்கும்” அதுதான் இந்த படத்துக்கு பொருத்தமா இருக்கு. .இயக்குநர் சி.எஸ்.அமுதன் முன்யோசனைக்காரர்.