‘ஒன்றாக ‘ எண்டர்டெயின்மென்ட் என்று பெயர் வைத்த ராசியோ என்னவோ ப்ரொட்யூசர் பிச்சுக்கிட்டு ஓடிட்டார். அல்லது ஓட வைக்கப்பட்டார். நரகாசுரன் படத்தை கவுதம் வாசுதேவ மேனன் தயாரிக்கிறார்,நரேன் கார்த்திகேயன் இயக்குகிறார் என செய்தி வெளியாகியது. ஆனால் சென்சார் ஆகி வெளியில் வந்திருக்கும் முதல் போஸ்டரில் கவுதம் மேனனின் பெயர் மிஸ்ஸிங்.!
ஏன், என்னாச்சு?
“இந்த படத்துக்காக கவுதம் மேனன் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. இந்த படத்தை வியாபாரம் பண்ணி அதில் கிடைக்கும் பணத்தை அவரது இயக்கத்தில் வளருகிற மற்ற படங்களுக்கு செலவு செய்து விடுவார்” என்பதாக நரேன் சொன்னதாக ஒரு பேச்சு இருந்தது. இதற்கு கவுதம் மேனனும் பதில் சொல்லி இருந்தார். இப்படி அவர்களுக்கிடையில் சண்டை ! எப்படியோ படம் வளர்ந்து சென்சார் ஆகி விட்டது 1 மணி 50 நிமிடம் ஓடும் படத்தில் நோ கட்.யு/ ஏ சர்டிபிகேட்.