மாற்றம் என்பதுதான் மாறாமல் இருப்பது என்பதை அடிக்கடி சொல்லி வருகிறது சர்கார் படக்குழு. வருகிற 26-ம் தேதி அமேரிக்கா போவதாக அறிவித்திருந்தார்கள் மூன்றாவது முறையாக! தற்போது நான்காவது முறையாக அதில் மாற்றம்.
எஸ்.!அந்த தேதியில் செல்லவில்லை. பதிலாக ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி கிளம்புவதாக பிளான்.11-ம் தேதி வரை அங்கு ஷூட்டிங் நடத்திவிட்டு தொடர்ச்சியாக சென்னை வந்து சில காட்சிகளை படமாகப் போகிறார்களாம்.அரசியல் படம் என்றால் சில மாற்றங்களை அவ்வப்போது செய்தாக வேண்டும் என்பதற்கு தளபதி விஜய்யின் சர்கார் நல்ல உதாரணம்.
கிடைத்த இடைவெளியில் இன்னொரு காரியத்தை செய்யவிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். சமுத்திரக்கனியின் நாடோடி இரண்டாம் பாகத்தின் முதல் போஸ்டரை இவர்தான் 27-ம் தேதி வெளியிடுகிறார்.