
பாக்கெட்டில் ‘பன்’ னை பத்திரப்படுத்தி வைத்து பசியாறிக் கொள்ளும் கஞ்சப் பிசிநாறி’ டான்’ விஜய்சேதுபதி. அசிஸ்டென்ட் ‘டான்’ யோகிபாபு. இவர்கள் இருவரும் இணைந்து பாரீசில் இருக்கிற சாயிஷாவை கடத்துகிறார்கள். ஏன் கடத்துகிறார்கள் என்பதுதான் கதை.
ஆக கதை இருக்கு.
காமடி இருக்கு
ஜாலியா இருக்கு.
லாஜிக்குக்கு லீவு
. நானும் ரவுடிதான் டான் விஜயசேதுபதியை நினைவு படுத்தாமல் ஜுங்க்காவை கடத்துகிறார், இயக்குநர் கோகுல். ” குடும்பத்தோடு வந்தியா ,பஞ்சமில்லாமல் சிரிச்சியா ,கவலையெல்லாம் போச்சா.நிம்மதியா வீடு போய்ச்சேரு”என்கிற பாலிசியை கையில் வைத்திருக்கிறார் கோகுல்.
“பசிக்குதுப்பா ..ஹோட்டலுக்கு போகலாம் வா”என்று கெஞ்சும் யோகிபாபுவை சாப்பிட வைத்துவிட்டு துட்டு கொடுக்காமல் ஓட வைக்கும் சாமர்த்தியசாலி சேதுபதிக்கு வித்தியாசமான கெட் அப். “ஆசை வருது.ஆனா சொல்ல முடியலியே” என்கிற ஏக்கமுடன் சாயிஷாவை ரசிக்கிறார் விஜயசேதுபதி! சிற்பி செதுக்காத பொற்சிலை மாதிரி சாயிஷா. “யாருக்கு கொடுத்து வைத்திருக்கோ” என ஏங்க வைக்கிறார். அப்பா சுரேஷ்மேனனிடம் போனில் பொய்யாக பதறும் இடத்தில் மட்டும் இந்த கட்டைக்கு நடிக்கவும் தெரியும் என்பது புரிகிறது.பிற்பாதியில் இவரை இழுத்துக்கொண்டு சேதுபதி பெரும்பகுதி ஓடினாலும் ஆறுதலுக்கு பாடல் காட்சிகளும் இருக்கிறது.
யோகிபாபு தலை காட்டும் போதெல்லாம் சிரிப்பு. சேதுபதியின் அம்மா சரண்யா பொன்வண்ணன்.வித்தியாசம் தெரிகிறது,ஆனாலும் அந்த பாட்டி காட்டும் கெத்துக்குத்தான் தியேட்டர் அதிர்கிறது. மிஞ்சுவதும் கெஞ்சுவதும் சூப்பர்.
பாரீசின் அழகை டட்லியின் கேமரா வழியாக தரிசிக்க முடிகிறது. இவரது கேமராவுக்கும் சாயிஷாவுக்கும் நல்ல உறவு!
சித்தார்த் விபின் இசை. தாலாட்டு. சற்றே பின்னணி இசையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.












