தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 27–ந் தேதி இரவு அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 29-ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு ஒத்துழைத்ததால் அவரது உடல்நிலை படிப்படியாக சீரானது.தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என பலரும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த வண்ணம் உள்ளனர். இன்று காலையில் நடிகர் விஜய் மருத்துவமனைக்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார்.இந்நிலையில், நடிகர் அஜித்குமார் பிரபல கண் டாக்டரும் ஜெய்சங்கரின் மகனுமான விஜயசங்கருடன் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து நடிகர் கவுண்டமணி,தி.க.தலைவர் கி.வீரமணி ஆகியோரும் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.