பாலிவுட்டில் கிங் என அழைக்கப்படுகிறவர் ஷாருக்கான். பாலிவுட்டில் வாரிசுகள் திரை உலகத்துக்கு வருவது புதிது இல்லை. கபூர் குடும்பமே வாரிசுகளை வரிசை கட்டி அனுப்புகிறபோது இவரது மகளின் பிரவேசத்தை மட்டும் கலாய்க்கிறார்கள். காரணம் பாலிவுட்டின் டாப் 1 கோடீஸ்வரன் ஷாருக் . பிரபல பத்திரிக்கை தனது அட்டையில் சுஹானாவின் கவர்ச்சிப் படத்தை பிரசுரித்திருக்கிறது.
“எவ்வளவோ கவர்ச்சிக் கன்னிகள் காத்திருக்கிறபோது சுஹானாவின் படத்தைப் பிரசுரம் செய்திருப்பது வலுத்த கையின் மகள் என்பதால்தானே? எனக்கேட்டு கலாய்த்திருக்கிறார்கள்.
அட போங்கப்பா. நடிகை ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்? அட்டைப்படம் வரை வந்து விட்டவர் சில்வர் ஸ்க்ரீனில் தோன்றுவதற்கு எவ்வளவு நாள் ஆகப்போகிறது?
அழகை ஆராதிக்கணும்,ஆராயக்கூடாது.