ஈரத்துணியைப் போட்டு கோழியை அமுக்குவதுபோல கோடி கொடுத்து பெரிய நடிகைகளை ஒரே அமுக்காக அமுக்கி விடுவார்கள் சில தயாரிப்பாளர்கள்.
“ஆத்தாடி இம்புட்டு பணமாச்சே ,”என்று காசு கை மாறி வந்த காரணத்தால் என்ன சொன்னாலும் அதுக்கேத்தபடி ஆடிப் பாடி நடித்து விடுவார்கள்.
ஆனால் சாய் பல்லவியிடம் நடக்கவில்லையே!
பெரிய ப்ரொடியூசர் பெல்லம் கொண்டா. பிள்ளை ஹீரோ. பெரிய நடிகையை ஜோடி சேர்த்து விட்டுறனும்னு அப்பாவுக்கு ஆசை. 2 கோடி வரை தருவதாக கொழுத்த தொகைக்குப் பேசினார்.
“முடியாது சார்,! வேற ஆளைப் பாருங்க”என சொல்லி விட்டார்.
மறுத்ததற்கான காரணம்தான் தெரியவில்லை.