கழகத்தினால் தலைவர் கலைஞர் ஒப்புதலுடன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க.அழகிரி. இவரை நீக்கம் செய்யக்கூடாது என்று குடும்பத்தில் உள்ள சிலர் கலைஞரை வற்புறுத்தியும் ,செயல்தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்தும் பார்த்தார்கள்.ஆனால் இருவரும் இடம் கொடுக்கவில்லை.
இக்கட்டான சூழல். கட்டுக்கோப்பு உடைந்திடாமல் கழகம் பாதுகாக்கப்பட்டது. தற்போது தலைவரை இழந்துவிட்டதால் அழகிரிக்கு முக்கிய பதவி கொடுக்கவேண்டும் என்று குடும்பத்தில் உள்ள சிலர் விரும்புவதாகத் தெரிகிறது.
முதலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள செயற்குழு,பொதுக்குழு ஒப்புதல் தரவேண்டும்.அதன் பின்னர்தான் எத்தகைய பதவி என்பதை முடிவு செய்வார்கள்,
கலைஞர் மறைவு அழகிரியின் ஆதரவாளர்களுக்குச் சற்றுத் தெம்பை கொடுத்திருக்கிறது. “திருப்பரங்குன்றத்தில் அண்ணன் அழகிரி போட்டியிடவேண்டும் “என்பதாகச் சொல்கிறார்கள்
கழகத்தின் செயற்குழு 14-ம் தேதி கூடுகிறது .இதில்தான் முடிவு தெரியும். அதற்குள் சில கணிப்புகள் வரத்தொடங்கிவிட்டன. அதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பதவிக்கு துரை .முருகன் என முடிவாகி விட்டதாகச் சொல்கிறார்கள். பேராசிரியருக்கு அவரது உடல் நலனைக் கருத்தில் கொண்டு பதவி உருவாக்கப்படும் என சொல்கிறார்கள் .
அப்படியானால் அழகிரிக்கு?
மீண்டும் தென்மண்டலப் பொறுப்பாளர் பதவி வழங்கப் படலாம் என சொல்கிறார்கள்.அவர் ஒப்புக்கொள்ள மறுத்தால்?
குடும்ப உறுப்பினர்கள் தலையீடு வரும் என்பதாகச் சொல்கிறார்கள். ஜெ.மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவு பட்டதைப்போன்று திமுகவில் பிளவு வருவதற்கு வாய்ப்பில்லை. ஸ்டாலின் கையே ஓங்கி இருக்கிறது. கலைஞர் மறைவுக்கு பின்னர் அண்ணா நினைவிடம் அருகில் இடம் பெற்றதில் ஸ்டாலினின் ஆற்றல் அளப்பரியது என்கிறார்கள்.
அதுவும் உண்மைதான்!