தெக்கித்தி மண்ணுக்கே உரியது கிருதா மீசை. ஊர்ப்பெரிசுகள் இன்றும் அதை பெருமையுடன் வளர்த்து வருகிறார்கள் .அந்த மீசையை சற்றே ட்ரிம் பண்ணினால் சினிமாப் போலீஸ் அதிகாரி மீசை! கிருதா மீசை வீரத்துக்கு அடையாளம். அந்த கிருதா மீசையுடன்தான் கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தார் அஜித். விஸ்வாசம் படத்துக்கான மீசையா?
“எஸ் ,சார்” என்கிறது சினிமா வட்டாரம்.
“இதுவரை மகன் வேடத்தில் நடித்தவர் இனி அப்பா கேரக்டரில் நடிக்கப் போகிறார்.கதை மதுரையை சுத்தி நடப்பதால் கிருதா மீசை தேவைப்படுகிறது.”என்கிறார்கள்.